Skip to content

புகைப்படம் : செர்னோபில் கதிர்வீச்சால் கருகிக் கிடக்கும் பெரும் வனப்பகுதி…. #KKNPP #PMANE #Koodankulam #Chernobil

April 26, 2012
புகைப்படம் : செர்னோபில் கதிர்வீச்சால் கருகிக் கிடக்கும் பெரும் வனப்பகுதி…. #KKNPP #PMANE #Koodankulam #Chernobil 

கூடங்குளம் அணு மின் நிலையத்தை அமைத்துத் தந்த ரஷ்யாவில், செர்னோபில் கோரத்துக்குப் பிறகு ஒரு அணு உலை கூட அமைக்கப்படவில்லை. இருக்கும் அணு உலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 780 பில்லியன் டாலர் பணம் தேவையாம்! ஆனால் உலகின் மற்ற நாடுகளுக்கு மட்டும் ரியாக்டர்களை விற்பதில் ஆர்வம் காட்டுகிறது இந்த ‘காலிப் பெருங்காய டப்பா!’

ரஷ்யாவின் செர்னோபில் என்ற பகுதியைச் சுற்றிய பெரும் நிலப்பரப்பு The Book of Eli படத்தில் வருவதைப் போல இன்று மனிதரில்லா பகுதியாகிவிட்டது. இந்தப் பகுதியில் இனி மனிதர் வாழ 20,000 வருடங்கள் தேவைப்படுமாம்!

இருக்கும் அணு உலைகளுக்கு லைசென்ஸ் நீட்டிப்பு மற்றும் புதிய அணு உலைகளுக்கு லைசென்ஸ் தந்ததை எதிர்த்து அமெரிக்காவில் பெரும் அளவு எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

2011-ம் ஆண்டு ஜப்பான் சுனாமிக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஆய்வில் 63 சதவீத அமெரிக்கர்கள் ‘இனி அணுஉலைகள் கூடாது, இருப்பதையும் மூடுங்கள்’ என்று கூறுகின்றனர். அமெரிக்காவில் எழுந்துள்ள அணு உலைகள் எதிர்ப்பு, அரசின் கொள்கை முடிவு மாற்றங்கள் குறித்து எழுத இந்த இடம் போதாது. ஆனால் இப்போதைய நிலை என்ன தெரியுமா…

‘என்னைத் தேர்ந்தெடுத்தால், அமெரிக்காவில் அணு உலைகளை ஒழிப்பேன்’ என்று செனட்டர் வேட்பாளர்கள் வாக்குறுதி தரும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது அங்கு. 

அணு உலைகள் இனி வேண்டாம் அல்லது மறுபரிசீலனை செய்யலாம் என முடிவு செய்துள்ள நாடுகள் பட்டியல்:

இத்தாலி, ஸ்வீடன், பிரிட்டன், அமெரிக்காவின் செல்லப்பிள்ளை இஸ்ரேல், சீனா, வெனிசூலா, பிரேசில்…

(நன்றி : என்வழி இணையதளம்,www.envazhi.com)

Advertisements

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: