Skip to content

தம்புள்ளை பள்ளிவாயில் நிலவரம்… சிலகேள்விகள் – புன்னியாமீன்

April 26, 2012

தம்புள்ளை பள்ளிவாயில் நிலவரம்… சிலகேள்விகள் – புன்னியாமீன்

இலங்கையில் 30 ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்பு பௌத்த பேரினவாதிகளினால் முஸ்லிம்களின் மனதை நோவினைப்படுத்தக்கூடிய இரண்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. 

2011 இறுதிப்பகுதியில் அநுராதபுர புனித பூமியில் அமைந்துள்ளதாக்கூறி நிகழ்த்தப்பட்ட தகர்கா தகர்ப்பு, மற்றது தம்புள்ளை புனித பூமியில் அமைந்துள்ளதாகக் கூறி கடந்தவாரம் தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளி தாக்குதல்

அநுராதபுர தர்கா தகர்ப்பின்போது இலங்கை முஸ்லிம்கள் அதுவொரு தர்கா என்ற அடிப்படையில் அது வியடமாக கூடிய அழுத்தத்தினை வழங்கவில்லை. அதுவொரு தர்காவாக இருந்தாலும்கூட முஸ்லிம்களின் வரலாற்றை உறுதிப்படுத்தக்கூடிய சான்றாக இருந்து வந்துள்ளதை எம்மால் மறுத்துவிடமுடியாது. 

தம்புள்ளை பள்ளிவாயில் தாக்குதலின்போது இலங்கை முஸ்லிம்களின் எதிர்ப்பலைகள் தீவிரமடைந்தன. தற்போதும் தொடர்கின்றன. குறிப்பாக இலத்திரனியல், இணைய ஊடகங்களும், பேஸ்புக் டுவிட்டர் போன்ற பொது ஊடகங்களும் இலங்கையில் ஏனைய அச்சு ஊடகங்களும் இப்பிரச்சினைக்கு வழங்கிய முக்கியத்துவம் காரணமாக இப்பிரச்சினை தேசிய ரீதியில் மாத்திரமல்லாமல் சர்வதேச ரீதியிலும் முன்னெடுக்கப்பட்டுவிட்டது. அல்ஜஸீரா, பிபிஸி உட்பட பல சர்வதேச ஊடகங்கள் இப்பிரச்சினையை முக்கியத்துவப்படுத்தப்பட்ட செய்தியாக எடுத்தமையும். தமிழ் நாட்டில் எமது முஸ்லிம் சகோதரர்கள் இலங்கை தூதுவராலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியமையும் சர்வதேச ரீதியில் இப்பிரச்சினை நகர்வதற்குக் காரணமாக அமையலாயிற்று. இதுகாலவரை நடைபெறாத வகையில் சில அரபுலக நாடுகள் இப்பிரச்சினை தொடர்பாக தமது தூதுவராலயங்களினூடாக வினவியுள்ளமை இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியை தோற்றுவிக்கக்கூடியது என்பது சந்தேகமில்லை. 

இலங்கை அரசியலில் முஸ்லிம்கள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாக இருந்துவருவது தெரிந்த விடயமே. அண்மைக்காலங்களாக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச அவர்களின் தலைமையின் கீழ் முஸ்லிம்கள் மத்தியில் பொதுசன ஐக்கிய முன்னணி மீது ஓரளவிற்கு முஸ்லிம்களின் சார்பு நிலை ஏற்பட்டுவருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. குறிப்பாக ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக பல்வேறுபட்ட ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர். அதேபோல உலமா சபை முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கைக்கு ஆதரவு திரட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை ஆற்றியது. 

இப்படிப்பட்ட நிலையில் சில பௌத்த பேரினவாதிகள் தூண்டுகோளின் பிரகாரம் தம்புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாயில் தாக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் அப்பிரதேசத்திலிருந்து பள்ளிவாயில் அகற்றப்பட வேண்டுமென அரசியலில் உயர்மட்டத்தில் தீர்மானம் எடுத்தமை முஸ்லிம்களை வேதனைப்படுத்தக்கூடிய ஒரு சம்பவமாகவே இருக்கின்றது. 

இப்பிரச்சினையின்போது உலமாசபை உட்பட பல்வேறு முஸ்லிம் அமைச்சர்கள் பல்வேறு முஸ்லிம் அமைப்புக்கள் பலதரப்பட்ட கண்டன அறிக்கைகளை வெளியிட்டன. மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுடன் இது குறித்து கதைக்க வேண்டுமென தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஜனாதிபதி அவர்களிடமிருந்து இது வரை எந்தவித உத்தியோக பூர்வமான பதிலும் வெளிவரவில்லை. 

இப்படிப்பட்ட நிலையில் இலங்கைவாழ் முஸ்லிம்கள் என்ற வகையில் எமக்கு சில கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியப்பாடு உள்ளது. 

1. இந்தப் பிரச்சினை குறித்து அகில இலங்கை உலமா சபை அல்லது முஸ்லிம் அமைச்சர்கள் அல்லது முஸ்லிம் அமைப்புகள் ஜனாதிபதி அவர்களை நேரடியாக சந்தித்து விடயத்தை தெளிவுபடுத்தியதா?

2. அப்படி சந்தித்திருந்தால் ஜனாதிபதி அவர்கள் எத்தகைய நிலைப்பாட்டில் இருந்திருந்தார்?

3. உலமாசபை முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம் அமைப்புகள் இப்பிரச்சினையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென அறிக்கைகள் விடுத்திருந்தன. இப்பிரச்சினை ஜனாதிபதிக்கு கடிதம் மூலமாக அல்லது தொலைபேசி மூலமாக அறிவிக்கப்பட்டிருப்பின் ஜனாதிபதி அவர்கள் அதற்கு எத்தகைய கருத்தினை கொண்டிருந்தார்.?

4. தம்புள்ளை பள்ளிவாயில் பிரச்சினை 20ம் திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் என்ற ரூபத்தில் வெளிப்பட்டாலும்கூட இதற்கான திட்டமிடல்கள் ஒருசில வாரங்களுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக அப்பிரதேச அரச வானொலி ஒன்று இப்பிரச்சினையை கூடியளவிற்கு முன்னெடுத்ததாகவும் தெரியவருகின்றது. அப்படியென்றால் 20ம் திகதிக்கு முன்பதாக இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதா?

5. இப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு என்ன?

6. ஏனைய புனிதபூமி பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் பள்ளி வாயில்களின் உத்தர வாதம் என்ன?

மேற்குறிப்பிட்ட இவ்வினாக்களுக்கு விடையினை இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

Advertisements

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: