Skip to content

ஆணுக்…

April 26, 2012

ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் சமமாக முடியுமா?

இஸ்லாமிய பார்வையை பொருத்தவரை இப்படியான கேள்விகளுக்கே இடமில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த சமம் என்ற வார்த்தையே நம் நினைவுக்கு வர தேவை இல்லை. ஆணுக்கு பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ சமமாக முடியாது. ஒரு விசயத்தை ஒப்பிட வேண்டும் என்றால் ஒப்பிடப்படும் இரண்டும் சம தன்மைகளுடன் இருக்க வேண்டும். அப்போது தான் ஒப்பீடு என்பது சரியான அணுகுமுறையாக இருக்கும். ஆனால், ஆண் பெண் விசயத்தை பொருத்தவரை இறைவன் வெவ்வேறு தன்மைகளுடனே படைத்திருக்கின்றான். அப்படி இருக்கும் போது ஒப்பீடு என்பது தவறான அணுகுமுறையே. 

ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாம் வெவ்வேறு பொறுப்புக்களை கொடுத்துள்ளது. பொது பார்வையில் பார்த்தால், ஆண் பெண் இருவரும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். ஆனால் எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதில் தான் இஸ்லாம் பொறுப்புகளை கொடுக்கின்றது. ஆண்களுக்கு குடும்பத்திற்கான சம்பாத்தியமும், மனைவி குழந்தைகளுடன் அழகான முறையில் நடந்துக்கொள்வதையும், பாதுகாப்பதையும்- பெண்களுக்கு தன் கணவர், குழந்தைகள் மற்றும் வீட்டின் அக்கறையையும் பொறுப்பாக கொடுத்துள்ளது.

குடும்பம் தான் முக்கியம். இதனை தாண்டி தான் மற்றது எல்லாம். காரணம், ஒரு குடும்பம் அழகான முறையில் இருந்தால் அது சார்ந்த தேசம் அழகான முறையில் இயங்கும். 

இந்த பொறுப்புகளை திருப்திபடுத்தி விட்டு தான் மற்ற விசயங்களில் ஆணும் பெண்ணும் ஈடுபடமுடியும். ஒரு ஆண் அரசியலில் ஈடுபடுகின்றான் என்றால், தன் குடுபத்திற்கான இஸ்லாம் வகுத்துள்ள பொறுப்புகளை பூர்த்தி செய்த பிறகு தான் புதிய பொறுப்பான அரசியலை கவனிக்க வேண்டும். அது போலவே பெண்களுக்கும். 

ஆக, இருவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து இணைத்து செயல்படுவது மட்டுமே மகத்தான ஒழுக்கமான சமுதாயம் மலர ஏதுவாக இருக்கும். இதனை புரிந்துக்கொள்ள மறுத்ததாலேயே மேற்குலகம் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கின்றது. பொருள் சார்ந்த விசயத்தில் ஈடுபட்டு மனஅமைதியை தொலைத்து கிடக்கின்றது. இஸ்லாமை ஏற்கும் பெரும்பாலான மேற்குலக சகோதர சகோதரிகளின் கருத்தை பார்த்தால் அவர்கள் வாழ்வில் இருக்கும் சோர்வை புரிந்துக்கொள்ள முடியும். குறிப்பாக சகோதரிகளை கேட்டால், பத்துக்கு பத்து பேரும் “இஸ்லாம் எங்களது பொறுப்புக்களை தெளிவாக சொல்கின்றது” என்று கூறுவதை பார்க்கலாம்.

இறைவனது பார்வையில், இவ்வுலகில் இறைகட்டளைகளை சரிவர பேணி வாழும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மறுமையில் சரி நிகரான வெகுமதியே. அதை இந்த குர்ஆன் வசனம் மெய்ப்படுத்துகின்றது. 

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் (குர்ஆன் 33:35)

அல்ஹம்துலில்லாஹ். 

Advertisements

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: